May 19, 2017
தண்டோரா குழு
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கோவையில் 96.42 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 0.2சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கோவையில் 20511 மாணவர்கள் மற்றும் 21138 மாணவிகள் என மொத்தம் 41,649 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதிய,நிலையில் 40,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவர்கள் 94.81சதவிகிதமும்,மாணவியர்கள் 97.97சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் 96.42ஆகும். இது கடந்தாண்டை விட 0.2சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் 519 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதியதில் 238 பள்ளிகள் 100சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.