• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பறவைக்காய்ச்சல் இல்லை மக்கள் அச்சம், பீதி அடைய வேண்டாம்

December 20, 2022 தண்டோரா குழு

கேரள மாநி­லத்­தில் பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு மீண்­டும் உருவாகி உள்­ளது. கேரள மாநி­லம் கோட்டயம் மாவட்­டத்­தில் உள்ள ஆர்ப்­புக்­கரை, தல­யா­ழம் பகு­தி­யில் உள்ள பண்­ணை­களில் இருந்த வாத்­து­, பறவைகள் திடீரென செத்து மடிந்­தன. இதை­ய­டுத்து, கால்­ந­டைத் துறை­யி­ன­ரும் சுகா­தா­ரத் துறையின­ரும் இந்­த பண்ணைகளில் ஆய்வு நடத்­தி­ய­போது பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து பறவைக்காய்ச்­சல் பாதிப்­புக்­குள்­ளான வாத்து, கோழி­களை அழிக்க உத்­த­ரவு ­விட்­ட நிலையில், கோட்­ட­யம் மாவட்­டத்­தில் 8,000 வாத்து, கோழி­கள் அன்மையில் அழிக்­கப்­பட்­டன. மேலும் 20 ஆயிரம் வாத்து, கோழிகள் போன்ற பறவைகள் அழிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்­த பறவைக்காய்ச்சல் பாதிப்­பின் எதி­ரொ­லி­யாக தமிழகத்தில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோழி பண்­ணை­கள், வாத்து பண்ணைகள் போன்றவற்றில் நோய்த் தடுப்பு முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.கேரளா மாநிலத்தையொட்டி உள்ள கோவை மாவட்டத்தில் வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் வழியாக கேரளா மாநிலம் வாகனங்கள் கோவைக்கு வருகின்றன. இதனை அடுத்து அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பறவைக்காய்ச்சல் தொடர்பாக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. இதனிடையே, கோவை மாவட்டத்தில் கோழிகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது தேக்கம் அடைந்து வருகிறது. இதனால், வியாபாரிகள் பெருமளவில் நஷ்டம் அடைவார்கள் என கோழி இறைச்சி மற்றும் கோழி பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோழி பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்,

‘‘தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் நோய் வந்தது இல்லை. தமிழகத்தில் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் கேரளாவிற்கு மாதந்தோறும் சராசரியாக 2 கோடி கிலோ கறிக்கோழிகள் அனுப்பப்படுகின்றன. பறவை காய்ச்சல் எதிரொலியாக இது தற்போது தேக்கம் அடைந்து வருகின்றன. கோழி இறைச்சிகளை நன்கு வேக வைத்து சமைத்து சாப்பிடலாம். கிறிஸ்­மஸ், புத்­தாண்டு விழாக்­கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலை­யில் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்கது’’ என்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனைச்சாவடிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் உள்ள கோழிப்பண்ணைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் உள்ளன. தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் தற்போது பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மக்கள் பீதியும் அச்சமும் அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க