September 3, 2021 தண்டோரா குழு
பள்ளி வாகனங்களை சரி செய்வதாக பெற்று 10 லட்சம் ரூபாய்க்கு விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள். சிவகங்கையில் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அருளின் நண்பர் கோவையை சேர்ந்த யூசுப் அலி. இவர் அருள் இடம் இருந்து 6 லட்சம் கடனாகப் பெற்றிருந்தார் கடந்த மே மாதம் அருள் இறந்ததால் பள்ளி நிர்வாகத்தை அவரது மகன் வினோத் பார்க்கத் துவங்கினார்.
இதையடுத்து யூசுப் அலி கடன் பெற்றது தெரிந்தது கடனை திருப்பி கேட்டபோது பணத்துக்குப் பதில் பள்ளி வாகனங்களை சர்வீஸ் செய்து தருவதாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய வினோத் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மூன்று வாகனங்களை அனுப்பிவைத்தார்.
வாகனங்களை யூசுப் அலி மற்றும் கூட்டாளி சாம் பால் இருவரும் பெற்றுக்கொண்டனர். வாகனங்களை சர்வீஸ் செய்வதற்கு பதில் கவுண்ட பாளையத்தை சேர்ந்த அந்தோணி மைக்கேல் சேவியர் என்பவருடன் யூசுப் அலி ஒப்பந்தம் செய்து பத்து லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
தொடர்ந்து பள்ளி வாகனங்களில் நிறங்களை மாற்றியுள்ளார். இந்த நிலையில் மூன்று வாரங்களாக வாகனங்களை ஒத்துழைக்காததால் வினோத் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கில் தொடர்புடைய சாம் பால் அந்தோணி மைக்கேல் சேவியர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.