• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிஎன்ஐ (BNI) தினத்தின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

January 28, 2023 தண்டோரா குழு

பி என் ஐ அமைப்பு ஒரு உலக அளவிலான ஒருங்கிணைந்த அமைப்பாகவும் மற்றும் உலகில் நம்பர் ஒன் அமைப்பாகவும் உள்ளது. பி.என்.ஐ அமைப்பானது இவான் மிஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்டது.

பிஎன்ஐ அமைப்பு கோவை மாவட்டத்தில் பத்தாவது ஆண்டை முன்னிட்டு கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்டமாக பி.என்.ஐ தின விழா கொண்டாடப்பட்டது.இதில் பிஎன்ஐ உறுப்பினர்கள் அனைவருக்கும் பி என் ஐ சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பி என் ஐ உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பி என் ஐ பத்தாம் ஆண்டு தின விழாவை முன்னிட்டு,காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பி என் ஐ அமைப்பு ஒரு உலக அளவிலான ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. பி.என்.ஐ கோவை மாவட்டத்தில் 26 குழுவில் 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. பி.என்.ஐ -இன் முக்கிய நோக்கம் மற்றவர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதே பி.என்.ஐ-ன் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. பி.என்.ஐ உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக இருந்து வருகின்றனர். பி.என்.ஐ -யில் உறுப்பினராக இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

மேலும் பி என் ஐ-யின் பத்தாம் ஆண்டு விழாவில் காவேரி குரூப் ஆப் கம்பெனி முக்கிய ஸ்பான்சராக உள்ளது. காவேரி நிறுவனம் பிவிசி பைப், யு பிவிசி பைப், போர்வெல் பைப், எலக்ட்ரிகல் பைப் மற்றும் 7 வண்ணங்களான வாட்டர் டேங்க் போன்றவை சிறந்த தரத்தில் உற்பத்தி செய்து வருகின்றோம்.

இன்று ‘ஃபீல் தி ஹீட்’ என்ற வாட்டர் டேங்க் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளோம். காவேரி நிறுவனத்தின் நோக்கம் 2035 ஆம் ஆண்டில் 8,500 கோடி மதிப்பில் மிகப்பெரிய கம்பெனியாக மாற்றி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க காவேரி நிறுவனம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க