February 12, 2025
தண்டோரா குழு
பிக்கி பெண்கள் அமைப்பு (FLO) சார்பில் பிரீமியம் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், “FLO கேலரியா மற்றும் ப்ரோமனேட்” கண்காட்சி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கோவை நகரின் தி ரெசிடென்சி டவர்ஸ் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
இரண்டு நாள் நடைபெறும் இந்த ஆடம்பர மற்றும் வாழ்க்கை முறை கண்காட்சியில், இந்தியா முழுவதிலுமிருந்து முன்னணி பிராண்டுகள் மற்றும் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர்களின் சேகரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சியில், தி ப்ரோமனேட் என்ற சிறப்பு கஃபே மற்றும் சந்தை பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை ராமகிருஷ்ணா குழுமத்தின் நிர்வாகி நாகஸ்வர்ண லட்சுமி நாராயணசாமி,ருஹ் நிறுவனங்களின் இணை நிறுவனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த பிரமாண்ட ஷாப்பிங் விழா, FLO கோவை அத்தியாயம் மேற்கொண்டுள்ள கிராம தத்தெடுப்பு திட்டத்திற்காக நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்படுகிறது.