• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம்

May 2, 2022 தண்டோரா குழு

கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், நேர்மையான வெளிப்படையான கல்வி அரசுப் பணி தரவுகளுடன் இணைந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு உடனடியாக எடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., அரசு, குறிப்பிட்ட வன்னியர் சமுதாயத்திற்கென, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. தற்போதையை புதிய தி.மு.க.அரசும் இட ஒதுக்கீட்டில் அரசாணை வெளியிட்டது.இது குறித்த வழக்கில், இடஒதுக்கீடை அண்மையில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வெளியானது.தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீடு ஒரு தலை பட்சமாக இருப்பதாகவும்,தமிழக அரசு முறையான ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் இது குறித்த கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது.இதில், வன்னியர் தனி இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த பல்வேறு மனுக்களில் மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரு உயிரிய நீதிமன்றங்களும் இட ஒதுக்கீடு ரத்து செய்து தீர்ப்பு வெளியிட்டுள்ளன இதனால் உண்மையான ஜாதிவாரி கல்வி சேர்க்கை அரசுப்பணி புள்ளிவிவரங்கள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேர்மையான வெளிப்படையான கல்வி அரசுப் பணி அவர்களுடன் இணைந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு உடனடியாக எடுத்திட வேண்டும்.. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஆக தொடர்ந்து 18 மாதகாலமாக போராடி வருவதை அறிந்தும் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தின் உள்ளேயும் வெளியேவும் பேசாமல் இருப்பதை கண்டிப்பதாகவும் மாண்புமிகு முதல்வர் எங்களது அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து எங்களது தரப்பு நியாயமான கோரிக்கைகளை கேட்க வேண்டும் எனவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மறுக்கப்பட்டு வரும் பணியிடங்கள் கல்வி சேர்க்கை பணியிட சலுகைகள் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை தீவிரமாக கண்காணித்து நிவர்த்தி செய்திட பிற்படுத்தப்பட்டோர் உரிமை கண்காணிப்பு குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் திரு தணிகாசலம் அவர்களை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து விலக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க