• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊக்கப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் !

August 30, 2024 தண்டோரா குழு

புச்சி பாபு கிரிக்கெட் போட்டி 2024 க்காக கோவை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணியின் வீரர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒரு அங்கமான SRIOR – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் இலவச புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர்.

2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடியபோது சூர்யகுமார் யாதவின் அதிரடி கேட்ச், போட்டியை இந்தியாஅணிக்கு சாதகமாக மாற்றியது. இதற்கு பின் இந்திய தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.அதன்பிறகு ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோவாக மாறிய சூர்யகுமார் யாதவ், கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தான் மூலம் ஹீரோவுக்கும் ஒரு படி மேல் சென்றுள்ளார் என கூறலாம்.

இந்த சந்திப்பின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை வார்டில் உள்ள குழந்தைகள், சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவை, சிவப்பு ரோஜாக்களை வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.இதையடுத்து வீரர்கள் குழந்தைகளின் மினி கிரிக்கெட் பேட்களில் கையொப்பமிட்டு அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சில குழந்தைகளிடம் சூர்யகுமார் யாதவ் உரையாடி அவர்களின் ஆர்வங்கள் குறித்து கேட்டறிந்தார்.

தங்களுக்கு பரிசளித்த வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உருவப்படங்களை நினைவுப் பரிசுகளாக குழந்தைகள் வழங்கினர். இந்த குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவினர் வாழ்த்தினர்.இதையடுத்து, இந்த வார்டில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் காலம் குறித்து சூர்யகுமார் யாதவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர்.பி.குகனிடம் கேட்டறிந்தார்.

டாக்டர்.பி.குகன் குழந்தைகளுக்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி அவரிடம் விளக்கினார். இந்த வார்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் 2005 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதாகவும், இதில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் புற்றுநோயியல் துறையின் கடின உழைப்பு மற்றும் இந்த உன்னத நோக்கத்துக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அளித்து வரும் மிகப்பெரிய ஆதரவை சூர்யகுமார் யாதவ் பாராட்டினார். இந்த தருணத்தின் போது எஸ்.என்.ஆர். & சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், SRIOR-ன் இயக்குனர் டாக்டர் பி. குகன்; புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க