• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று !

July 28, 2023 தண்டோரா குழு

கோவையில் ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்பின் 3ம் சுற்று ஜூலை 29 (சனி) மற்றும் ஜூலை 30 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்த எப்.எம்.எஸ்.சி.ஐ. சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ புரோமொடேராக உள்ளது.இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும் இரண்டாம் சுற்று இட்டாநகரிலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

கோவையில் நடைபெறும் 3ம் சுற்றின் துவக்க விழா இன்று (28.7.2023) கோவை ஜென்னிஸ் கிளப் வளாகத்தில் நடைபெற்றது.‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’பின் தலைவர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த 2-நாள் கார் ராலியில் இந்திய முழுவதும் இருந்து மொத்தம் 7 அணிகள் மற்றும் 17 தனி போட்டியாளர்கள் சார்பில் 76 கார்கள் வெவ்வேறு ஐ.என்.ஆர்.சி. (INRC) போட்டி பிரிவுகளில் பங்கேற்கிறது. (ஐ.என்.ஆர்.சி., ஐ.என்.ஆர்.சி. 2., ஐ.என்.ஆர்.சி. 3., ஐ.என்.ஆர்.சி.4., ஜூனியர் ஐ.என்.ஆர்.சி., பெண்கள் பிரிவு மற்றும் ஜிப்சி பிரிவு ) மொத்தம் 6 பிரதான் ரேஸ் பிரிவுகள் இந்த இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற துவக்க விழா நிகழ்வில் INRC பிரிவின் அர்ஜுன் ராவ், INRC2 பிரிவின் சாகில் கண்ணா,INRC3 பிரிவின் சேஷங் ஜம்வால், INRC4 பிரிவின் அபின் ராய், ஜிப்சீ பிரிவின் சாம்ராட் யாதவ் JINRC பிரிவின் அர்நாவ் பிரதாப், INRC பெண்கள் பிரிவின் ஷிவானி பர்மர் மற்றும் கோவை INRC திறமை போட்டியில் வெற்றி பெற்ற ஹெம் ராஜ் கலந்து கொண்டனர்.

முதல் நாள் நிகழ்வுகளுக்கான பந்தய தடம் L&T சாலை அருகே உள்ள SM அக்ரோ வளாகத்திலும் இரண்டாம் நாளுக்கான தடம் கோவையை அடுத்த கேத்தனூர் பகுதியிலும் நடக்கிறது. போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.6.5 லட்சம் அளவிலான பரிசு தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியை பொதுமக்கள், பந்தய பிரியர்கள் இலவசமாக நேரில் பார்த்து ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க