January 10, 2022 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில்
பூஸ்டர் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மக்கள் தொகை 38 லட்சத்து 67 ஆயிரம். இதில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள் 27 லட்சத்து 90 ஆயிரம். இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 27 லட்சத்து 51.இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டவர்கள் 22 லட்சத்து 84 ஆயிரம் பேர்.தடுப்பூசி செலுத்தியதில் கோவை மாவட்டம் மாநில அளவில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.
தற்போது 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.இதுவரை ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் இருபத்தி 27 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டியது உள்ளது.
இந்நிலையில்,இன்று 3-வது தவணை தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் முன் களப்பணியாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் சுகாதாரப் பணியாளர்கள் 85 ஆயிரத்து 554 பேர் முன் களப்பணியாளர்கள் 96 ஆயிரத்து 762 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 72 ஆயிரம் பேர் என 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி பூஸ்டர் டோஸ்தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் 9800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா கேர் சென்டரில் 4300 படுக்கைகளும் 5ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
வெளியே செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக இரண்டு முககவசங்களை அணியை வெளியே செல்ல வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.