September 24, 2022
தண்டோரா குழு
கடந்த இரு நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இதையடுத்து, கோவையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ,மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன் ஆகியோருடன் காணொளி காட்சி வாயிலாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.