March 29, 2022 தண்டோரா குழு
இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலி பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 10 மாதங்களாக கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால்,பொதுமக்கள், வீட்டை பூட்டி வெளியே செல்வதற்க்கும், நகைகள் அணிந்து வெளியே செல்வதற்க்கும் முடியாமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரை போலிசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 6 சவரன் எடைகொண்ட இரண்டு தங்க சங்கிலியையும், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலணி பகுதியை சேர்ந்த ராஜாத்தி என்பவர் கடந்த 15 ஆம் தேதி இருகூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது,இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து முன்னால் சென்றுகொண்டு இருந்த ராஜாத்தியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் வேகத்தில் சென்றனர்.
இதுகுறித்து ராஜாத்தி கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தை தொடர்ந்து சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் போஸ் வழக்கு பதிவு செய்து சம்பவஇடத்தில் ஆய்வு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் இருவர் சங்கிலி பறித்து செல்வது பதிவாகி இருந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் இன்று குற்றதடுப்பு நடவடிக்கையாக மசக்காளி பாளையம் அகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கோவை பி.என் புதூரை சேர்ந்த தமிழ்செல்வன், மற்றும் திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ராஜாத்தியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடமும் தங்க சங்கிலி பறித்து சென்றது விசாரனையில் உறுதியானது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் அவர்களிடமிருந்து 6 சவரன் எடைகொண்ட இரண்டு தங்க சங்கிலிகளையும், சங்கிலி பறிப்பிற்கு பயன்படுத்தி வந்த யமஹா இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.