June 13, 2023 தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பெண் தமிழ்ச்செல்வி,கடந்த ஐந்து வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வழியினால் அவதிப்பட்டு இருக்கின்றார்.சிறு அளவில் அடிவயிற்று வீக்கமாக ஆரம்பித்த இவருக்கான உடற்குறைபாடு,தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே இருந்திருக்கின்றது.பின்னர் வயிறு வீக்கம் பெரிதாகவே,கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்ச்செல்வி கடும் வலியுடன் அவதிப்பட்டு வந்தார். மூச்சு விட முடியாமலும் திணறி இருக்கின்றார்.
இதனைத்தொடர்ந்து அவர் விஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரை சர்ஜிகல் கேஸ்ட்ரோ என்றோலஜிஸ்ட் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் பரிசோதித்துப் பார்த்தார்.அப்போது அவரது வயிற்றை ஸ்கேனில் பார்த்த போது, தமிழ் செல்வியின் வயிற்றில் ராட்சச கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது.இந்த கட்டியானது தமிழ்ச்செல்வியின் சினைப்பையில் வளர்ந்திருக்கின்றது.
இதுகுறித்து தமிழ்ச்செல்வியின் முந்தைய மருத்துவ குறிப்பீடுகளை பார்த்த பொழுது, இந்த கட்டி சிறிதாக இருந்த பொழுதே தமிழ்ச்செல்விக்கு தெரிய வந்திருக்கின்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டதனால், கட்டி பெரிதானது. கடும் வலியுடனும், மூச்சு விட முடியாமலும் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் கடும் போராட்டத்துடன் முதன்முறையாக விஜிஎம் மருத்துவமனைக்கு வந்த தமிழ்ச்செல்விக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழுவினர் திட்டமிட்டனர்.மருத்துவர் கோகுல் கிருபா சங்கர் தலைமையிலான மருத்துவர்கள் குழு, தமிழ்ச்செல்விக்கு அறுவை சிகிச்சை முதல்கட்ட திட்டமிடலில் இறங்கினர்.தமிழ்செல்விக்கான அறுவை சிகிச்சைக்கு டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தலைமை வகிக்க, கேஸ்ட்ரோ மருத்துவர்கள் டாக்டர் சுனைபத்,டாக்டர் அருண், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன், ரத்த நாள சிகிச்சை நிபுணர் டாக்டர் கேசவன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஹரிஷ் உள்ளிட்டோர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
சுமார் 4 மணி நேரம் 30 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில்,தமிழ் செல்வியின் வயிற்று பகுதியிலிருந்த 36 கிலோ அளவிலான ராட்சத கட்டி அகற்றப்பட்டது.அந்த கட்டியின் எடை உடல் குறைபாடுடன் வந்த தமிழ் செல்வியின் உடல் எடையில் சரி பாதி எடையாகும். 4 மணி நேரம் 30 நிமிடம் பல்துறை மருத்துவர்கள் நேரடி கண்காணிப்பின் கீழ் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்பொழுது நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் குணமடைந்து வருகின்றார்.
இந்திய அளவில் உடல் குறைபாடுடன் வந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 36 கிலோ எடையுடன் கட்டி அகற்றப்பட்டது இதுவே முதல்முறை. இதுபோன்ற ராட்சச கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சைகள் இந்திய அளவில் வெகு சிலவே வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு இருக்கின்றன.அந்த வகையில் தமிழ்ச்செல்வியின் வயிற்றில் வளர்ந்த ராட்சச கட்டியை அகற்றிய வி.ஜி.எம் மருத்துவர்கள் பெரும் சாதனையை செய்திருக்கின்றனர்.
இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை செய்த டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தலைமையிலான மருத்துவர்கள் , செவிலியர்கள் அடங்கிய மருத்துவர் குழுவை பலரும் பாராட்டி ஊக்குவித்தனர். டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தலைமையிலான மருத்துவர்கள் குழு 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.