July 6, 2022
தண்டோரா குழு
லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கியுள்ள ‘காளி’ என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்டர் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் சரஸ்வதியை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது ஆபாசமாக பேசுதல்,கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.