May 28, 2022 தண்டோரா குழு
கோவை காந்திபுரம் நகரப் பேருந்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது இந்த 50 நம்பர் பேருந்து காந்திபுரம் உக்கடம் ஆத்துப்பாலம் மதுக்கரை பாலத்துறை ஆகிய இடங்களுக்கு செல்கிறது.
இந்தநிலையில் கடந்த வாரம் ஒரு வயதான பெண்மணி பேருந்தில் ஏறி கொண்டு பச்சா பாளையத்திற்கு விட வேண்டும் என வற்புறுத்தி உள்ளார் நடத்தினர் இந்த வாகனம் செட்டுக்கு செல்கிறது என பலமுறை கேட்டும் அந்த வயதான பெண்மணி இறங்க மறுத்துள்ளார் மேலும் அந்தப் பெண்மணி இந்தப் பேருந்து மேற்கு விடு எனவும் நடத்துனரிடம் இந்த பேருந்து செல்லாது என எழுதிக் கொடு என கேட்டுள்ளார்.
இதற்கு அந்த நடத்துனர் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் எப்படி நாங்கள் வாகனத்தை ஓட்டுவது என வேதனை தெரிவித்து உள்ளார். மேலும் இலவச பயணம் வந்தாலும் வந்தது சிலர் பேருந்து தங்களுக்கு சொந்தம் என நினைத்துக் கொள்கின்றனர். அதேபோல ஓட்டுனர் நடத்துனர் தங்களுக்கு அடிமை என நினைத்து பல்வேறு பிரச்சினைகளை கையாண்டு வருகின்றனர்.
ஓட்டுனர் நடத்துனர் மாணவர்களின் அடிக்கடி படிக்கட்டு பயணம் அட்டகாசம் பொறுத்துக்கொண்டு பணி செய்து வருகின்றனர் இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிரச்சனை என்றால் ஓட்டுநர் நடத்துநர் மீது குற்றம் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது.