April 9, 2024 தண்டோரா குழு
கோவை துடியலூரில் உள்ள உமா தேவி மருத்துவமனையில் புதியதாக போதி மைன்ட் கேர் மருத்துவமனை துவக்கப்படவுள்ளது.மனநலத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பான கவனிப்புடன் இது துவங்கப்படவுள்ளது.
புதுமையான சிகிச்சையையும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. முழுமையாக குணமடைதல்,நலமுடன் வாழ்தலை நோக்கமாக கொண்டு பல்வேறு சிகிச்சை முறைகளை இது மேற்கொண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன், அனைவரும் பயன்பெறும் வகையில் உயர்தர சிகிச்சையையும் தரவுள்ளது.
இதுகுறித்து போதி மனநல மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்தவர் ராஜா நடராஜன், பேசண்ட் சேப்டி மற்றும் குவாலிட்டி துறையின் இயக்குனர் மருத்துவர் ஸ்ரீதேவி ஆறுமுகம் மற்றும் ஸ்ட்ராட்டிஜி மற்றும் கம்யூனிகேஷன் இயக்குனர் மருத்துவர் கே. வசந்தகுமார் ஆகியோர் கூறியதாவது :-
போதி மைன்ட் கேர் மருத்துவமனையில் மாரிஸ் தினசரி நல மையம் ஒன்று துவக்கப்படவுள்ளது. முழுமையாக குணமடையவும், சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ளவும், அதிநவீன சிகிச்சைக்கு முன்னோடி மையமாக செயல்படவுள்ளது. போதி மைன்ட் கேர் மருத்துவமனையின், உயர்தர சிகிச்சைக்கும், சர்வதேச சேவைக்கும் உறுதியளிக்கும் விதமாக இது இருக்கும். சரியான நேரத்தில், சரியான இடத்தில் சிகிச்சை அளித்து மறுவாழ்வை அளிக்கும். மூளை மற்றும் மனம் தொடர்பான நிலை, நினைவாற்றல் பிரச்னைகள், போதைக்கு அடிமையாதல், ஆட்டிசம் மற்றும் வலிப்பு நோய் போன்றவைகளை கண்டறிந்து சிகிச்சை தரும் மூளை வரைபடம் மற்றும் இஇஜி நியுரோ பின்னுாட்ட மையம், நரம்பியல் அமைப்பை படம் பிடித்துக் காட்டும் முதல் மையம் இந்தியாவில் முதன் முறையாக துவக்கப்படுகிறது.
எங்களது மனநல மருத்துவ பயிற்சி மற்றும் கல்வி குழு, ஆக்ஸ்போர்டு மனநல கல்வி வகுப்புகளை இணைந்து நடத்துகின்றன. இங்கிலாந்து, ஐரோப்பியா, சிங்கப்புர், ஐக்கிய அரபு நாடுகளுடன் இணைந்து செவிலியர் பயிற்சி, மனநல மருத்துவர்கள், சமுதாய பணியாளர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது.
மாரிஸ் தின மையமானது, பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தனிப்பட்ட சிகிச்சை, குழு சிகிச்சை, தொழில்முறை சிகிச்சை, இசை மற்றும் மசாஜ் சிகிச்சை போன்ற மனநலம் தரும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதோடு, மனநல பயற்சி சிகிச்சை, குழந்தைகள் மேம்பாட்டு மையம், நினைவாற்றல் கிளினிக், மனவேகத்தை குறைக்கும் பயிற்சிகள், மறுவாழ்வு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் பல்வேறு வயதினருக்கும் ஏற்ற வகையில் அளிக்க வசதிகள் உள்ளன. இந்த சேவையோடு போதி மைன்ட் கேர் மருத்துவமனையில் 24 மணி நேரமும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கும் வசதியும் உள்ளது.
அதிநவீன வசதி கருவிகளாக நரம்பியல் நல தொழில்நுட்பம், குவாண்டடேடிவ் எலக்ட்ரோ என்செபாலோ கிராபி, மூளை வரைபட கருவி, ஆர்டிஎம்எஸ் சிகிச்சை போன்றவைகளும் உள்ளன. மனரீதியான மேம்பட்ட தரமான சிகிச்சையின் முக்கியத்துவமாக போதி மைன்ட் கேர் மருத்துவமனை, ஆக்ஸ்போர்டு சைக் கல்வி மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து பயிற்சிகள் தரப்படுகின்றன. இது, மனநல துறையில் திறன்வாய்ந்த பணியார்களை உருவாக்கவும், நிபுணத்துவம் பெற்ற சிகிச்சையாளர்களின் ஆலோசனை பயிற்சிகளையும் பெற உதவுகிறது.
“மன நல மருத்துவத்தில் முன்னோடி மருத்துவமனையாக திகழவும், ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளவும், தேவையறிந்து சேவை செய்வதையும், எங்களது மருத்துவமனை நோக்கமாக கொண்டுள்ளது. தினசரி கவனிப்புக்கான இந்த புதிய மையத்தை துவக்கமும், இதற்கு உறுதுணையாக அமையும். பல்வேறு வகையான சிகிச்சை முறைகள், நல சிகிச்சைகள், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். மாரிஸ் தின கவனிப்பு மையம் தற்போது துவக்கப்பட்டுள்ளது,” என்றார்கள்.
இப்புதிய மையத்தை, ஏப்ரல் 13, 2024 அன்று மாலை 5.00 மணிக்கு சங்கரா கண் மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பி.வி. ரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, மாலை 7.00 மணிக்கு கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணர் பிரிவு அருகே உள்ள லட்சுமி நாராயணா கல்யாண மண்டபத்தில், மன நலம் சிறக்க பெரிதும் தேவை “பணப் பெருக்கமா ? உறவு நெருக்கமா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. இதில், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் பங்கேற்று பேசுகின்றனர். பொதுமக்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.