March 7, 2023 தண்டோரா குழு
கோவை ரவடி சத்தியபாண்டி கொலை வழக்கில் சரண்டரான குற்றவாளி சஞ்சய் ராஜா போலிஸ் கஸ்டீடியில் அத்துமீறல்.வழக்கு விசாரணையில் சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியை போலிஸாரிடம் எடுத்து தருவதாக அழைத்து சென்ற போலீசையே சுட முயன்றதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்திபாண்டி (31). இவர் காட்டூரில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்திருந்தார். இவர் தொடர்ந்து அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 7க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி 5 பேர் கும்பல் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் சத்திபாண்டியை கும்பல் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் தீத்திபாளையம் சேர்ந்த காஜா உசேன் (24), மணிகண்டன் (25), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சஞ்சய் குமார் (23), அல்ஜபீர் கான், நாகர்கோவிலை சேர்ந்த சஞ்சய்ராஜா ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, கோவை சிறையில் அடைத்துள்ளனர்.
இதில், முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா தான் மறைத்து வைத்திருந்த துப்பாகியை எடுத்து தருவதாக கூறியதை அடுத்து இன்று காலை கோவை கரட்டுமேடு முருகர் கோவில் அருகில் போலீஸார் அவரை அழைத்து சென்றனர். அப்போது ஆய்வாளர் கிருஷ்ணலீலா, உதவிஆய்வாளர்கள் சந்திரமூர்த்தி, சந்திரசேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் முதல்நிலை காவலர் ஸ்ரீதர் ஆகியோர்களை கரட்டுமேடு முருகர் கோயில் வடபுரம் உள்ள மலை சரிவிற்கு சஞ்சய் ராஜாவை அழைத்து வந்துள்ளார்.
அப்போது அங்கு மறைத்துவைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்தவுடன் ஆய்வாளரை நோக்கி ஒரு குண்டு சஞ்சய் ராஜா சுட்டுள்ளார். நொடி பொழுதில் ஆய்வாளர் கிருஷ்ணலீலா தன்னை தற்காத்துக்கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்பு தான் மறைந்து விடவே மீண்டும் ஒருகுண்டு அவரை நோக்கி உன்னை கொள்ளாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு கொலை வெறியுடன் சுட்டுளார்.
உடனே போலீஸார் தங்களை தற்காத்துக்கொள்ள உடன் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் சஞ்சராஜாவின் இடதுகால் முழங்காலுக்கு கீழ் சுட்டுள்ளார்.அது இடத்துக்கால் முட்டியில் படவே சஞ்சசைராஜா தனது கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுள்ளார்.
சஞ்சய்ராஜாவை காவல்துறை வாகனத்தில் அழைத்து அரசு மருத்துவமனையி ல் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்கள். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.