• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் கணவரை கொல்ல திட்டம் -5 பேர் கைது !

March 8, 2022 தண்டோரா குழு

கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் கணவரை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம் தீட்டிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அருண்குமார் (28), ஹைதராபாத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 7 மாதங்களாக சொந்த ஊரிலிருந்து பணியாற்றி வருகிறார்.

இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி போது, அங்கு தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த சஹானா என்பவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் இருவரும், அருண் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு இசுலாமியரான சஹானா இந்து மதப்படி மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஹானாவின் பெற்றோர்,சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், அருணை இசுலாமிய மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதற்கு குமரேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,சஹானாவின் உறவினர்கள் வைத்துள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இது தொடர்பாக விவாதித்து வந்துள்ளனர்.அப்போது அவரது உறவினர்கள், குமரேசனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய திட்டம் தீட்டியதோடு,இது தொடர்பாக கல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியில் பேசியுள்ளனர்.இந்த தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை, இது தொடர்பாக கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஈரோடை சேர்ந்த முகமதி அலி ஜின்னா, திருச்சியை சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன்,சென்னையை சேர்ந்த பக்ருதீன் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.மேலும் துப்பாக்கி விற்பனையாளர்களுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டுசதி, சாதி, மத, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்னர்.

மேலும் படிக்க