• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மனித நேயத்தை வலியுறுத்தி மத நல்லிணக்க கருத்தரங்கம்

October 2, 2023 தண்டோரா குழு

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம், தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம்,ஆகியோர் சார்பாக மனித நேயத்தை வலியுறுத்தி மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் மனித நேயத்தை வலியுறுத்தும் அண்ணல் காந்தியின் 155 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம் ஆகியோர் இணைந்து மத நல்லிணக்க கருத்தரங்கம் கோவை சாய்பாபாகாலனி பகுதியி்ல் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்ற இதில்,நிர்வாகிகள் எம் எம் ராமசாமி சுப்பிரமணியன் பஷீர், திலீப் குமார், காந்தி சுப்பிரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இஸ்கப் மாவட்ட செயலாளர் ராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், ஆறுமுகம்,இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பேபி சுதா ரவி சரவணகுமார் மல்லிகா புருஷோத்தமன் சாந்தி பிரவீன் ராஜ் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்,மகாத்மா காந்தியின் முகமூடி அணிந்து கொண்ட பலர் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் ,பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையுரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

மத நல்லிணக்க பிரச்னைகளுக்கு தீர்வு காணவும்,மனித நேயத்திற்கும் காந்திய கொள்கைகள் எப்போதும் தேவைப்படுவதாக கூறினார். இஸ்கப் மாநில செயலாளர் கோட்டியப்பன், திருக்குறள் அன்வர் பாஷா முனைவர் அபுதாகிர் கோட்டை செல்லப்பா பாலசுப்பிரமணியன் சீனிவாசன் பூபேஷ் சஞ்சய் காந்தி பொன்ராஜு, அயூப் ரியாஸ், முகமது இஸ்மாயில் அசேன் தங்கவேல் கண்ணன் மெட்டல் சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க