• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மர்ம சூட்கேசால் பரபரப்பு

February 14, 2022 தண்டோரா குழு

குண்டு வெடிப்பு தினத்தில் காலியாக கிடந்த மர்ம சூட்கேசால் காந்திபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் தமிழக சிறப்பு அதிரடிப்படை, வெள்ளலூரில் உள்ள மத்திய அதிவிரைவுப்படை போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அசாம்பவிதங்கள் ஏற்பட்டால் கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் சீருடை அணியாத போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்திற்கு அடியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. நீண்ட நேரமாக அதனை யாரும் எடுக்காததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சூட்கேசை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் எந்த பொருட்களும் இன்றி காலியாக கிடந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். குண்டு வெடிப்பு தினத்தில் காலியாக கிடந்த மர்ம சூட்கேசால் காந்திபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க