• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாணவியின் உணவு குறித்து சர்ச்சையாக பேசிய ஆசிரியை பணியிடமாற்றம்

November 24, 2023 தண்டோரா குழு

கோவையில் ஏழாம் வகுப்பு மாணவி உணவு முறை குறித்து பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளித்து இருப்பது தொடர்பாக – மாவட்ட சிறுபான்மை நலத்துறை, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

கோவை துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7″ம் வகுப்பு படிக்கும் மாணவி,பள்ளி பயிற்சி அபிநயா, ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார்.மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்து ஆடுகின்றாயா என உணவு முறை குறித்து பேசியதுடன்,அடித்ததாகவும், பர்தாவால் காலனிகளை துடைக்க சொன்னதாகவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இது குறித்து கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பள்ளியில் புதன் கிழமை நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.இந்நிலையில்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தனது விசாரணை அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் வழங்கினார். இதனிடையே மாணவியின் தரப்பில் ஆட்சியரை சந்தித்து இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இந்த விவகாரம் குறித்து மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்,குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைத்து விசாரணை நடத்திட உத்திரவிட்டார்.
இந்த விசாரணையானது விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பள்ளியில் சர்ச்சைக்கு காரணமாக பயிற்சி ஆசிரியர் அபிநயாவை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்தும் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்ததுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க