• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்கம்

December 28, 2022 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளி துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை கலெக்டர் சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:

இக்கண்காட்சி இன்று முதல் 15 தினங்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 60 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜவுளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வடிவமைப்புகளில் கோவை கோரா காட்டன், காட்டன் மென்பட்டு சேலை, சுத்த பட்டு சேலை ரகங்கள், நெகமம் காட்டன் சேலைகள், சென்னிமலை பெட்சீட்கள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டு ரகங்கள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் தமிழக அரசின் 30 சதவீதம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும்.
தற்போது இக்கண்காட்சியில் ரூ.100 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் டெக்ஸ்டைல் கமிட்டி வேணுகோபால், நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மேலாளர் ரத்தினவேல், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் குமரேசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் சிவக்குமார், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அப்துல் பார்க் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க