March 3, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த பொதுமக்களின் வசதியை கருதி வரும் 4 (நாளை) மற்றும் 5ம் தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வலியம்பாளையம், வீரியம்பாளையம், காளப்பட்டி நேரு நகர் பள்ளி, ரயில்வே கேட் பகுதி, ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதிகளில் நடைபெற உள்ளது.மேற்கு மண்டலத்திற்குட்பட்ட இடையர்பாளையம் அன்பு நகர் 3வது வீதி நாகாத்தம்மன் கோவில் வளாகம், சீரநாயக்கன்பாளையம் – அங்கன்வாடி மையம், தென்றல் நகர் 2வது வீதி, தென்றல் நகர் சங்க அலுவலகம், அஜ்ஜனூர் கருணை மாரியம்மன் கோவில் வளாகம், மருதகோணார் வீதி, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட், புற்றுக்கண் மாரியம்மன் கோவில் வளாகம், சிக்கராயபுரம் விநாயகர் கோவில் வளாகம், மகாராணி அவென்யூ 1வது பேஸ், மாநகராட்சி பூங்கா, திலகர் வீதி – மாநகராட்சி பள்ளி பகுதிகளில் நடைபெறவுள்ளது.
தெற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், ஹவுசிங் யூனிட் முதல் பேஸ் பகுதிகளில் நடைபெற உள்ளது. வடக்கு மண்டலத்தில் சுப்ரமணியம்பாளையம்- வார்டு அலுவலகம் அருகில், மணியகாரம்பாளையம்- அம்மா உணவகம், விநாயகபுரம், காந்தி மாநகர் – அரசு மேல் நிலைப்பள்ளி, காமதேனு நகர் – வார்டு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர், நாராயணசாமி வீதி, சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளி, ஒலம்பஸ்-80 அடி ரோடு, மாநகராட்சி வணிக வளாகம், கெம்பட்டி காலனி -மாநகராட்சி ஆரம்ப பள்ளி, தர்கத் இஸ்லாம் பள்ளி பகுதிகளில் நடைபெற உள்ளது.
மேலும், வரும் 31ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில், அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.