February 8, 2018 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் கிருஷ்ணாம்பதி குளம், உக்கடம்,பெரிய குளம்,வாலாங்குளம்,முத்தூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பறவைகள் கணக்கெடுப்பில் வனத் துறையினர்,தன்னார்வலர்கள் கலந்துகொண்டு உள்ளனர்
கோடை காலம் துவங்கும் முன்பு பறவைகள் கணக்கெடுப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம் என்பதால் தற்போது இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்,25 குளங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள வயல் வெளிகளில் காணப்படும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மொத்தம் 18 குழுக்கள் உள்ளனர்.ஒவ்வொரு குழுவிலும் நான்கு நபர்கள் உள்ளனர்.மேலும் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த பிறகு கோவை நீர்நிலைகளில் இருக்கும் பறவைகள் குறித்த விபரங்கள் தெரிய வரும்.