September 16, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் திமுக அரசின் மின் கட்டணம் உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், டி.கே.அமுல் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையுரை ஆற்றினார்.
மேலும், அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.