• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன்முறையாக தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி !

August 11, 2023 தண்டோரா குழு

கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான போட்டிக்கான தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளர் வி.இ.அருணாச்சலம் கூறுகையில்,

இந்த போட்டியில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி சேர்ந்த 200 வீரர்கள் இருக்கிறார்கள். இப்போட்டி ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. 19 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 19 வயதிற்க்கு மேல் உள்ளவர்கள் என ஒற்றையர்கள் மற்றும் இரட்டையர்கள் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது.

தென்னிந்திய அளவிலான பேட்மிட்டன் போட்டி கோவையில் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியானது ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தகுதி பெறுபவர்கள் தேசிய அளவிலான சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர் இறுதி போட்டி அக்டோபர் மாதம் அசாம் மாநிலத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜூனியர் அளவில் 10 பரிசுத்தொகையும் சீனியர் அளவில் 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் சர்வதேச அளவில் பயிற்சி அளிக்கப்படுவதால் தமிழ்நாடு அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு அணியும் சீனியர் பிரிவில் கர்நாடக அணியும் சாம்பியன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோவை பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவர் அருண், கோவை பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க