• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் முறையாக கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி! – எப்போது?

June 16, 2024 தண்டோரா குழு

ஆகஸ்ட் மாதம் 17″ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.இதில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக்ராஜா கூறியதாவது,

இந்நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் இங்கு இந்த நிகழ்ச்சியை இடம் மாற்றி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி எனவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களும் இடம் பெறும் எனவும் 3-4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என கூறினார்.

மக்களைப் பார்த்து இலவசமாக பாட சொல்லினாலும் பாடுவேன் எனவும்
பாடல்களின் ரசனை ஒவ்வொரு ஊருக்கும் மாறும் என தெரிவித்த அவர் உதாரணத்திற்கு நம்மூர் மக்களுக்கு மதுர மரிக்கொழுந்து பாடல்கள் பிடிக்கும் என்றால் வெளியூர்களில் வேறு விதமான பாடல்கள் பிடிக்கும் என கூறினார். அது மட்டுமின்றி தமிழ் சினிமா இசை என்றாலே அனைவரும் ஆர்வமாக இருப்பதாகவும் மேலும் காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதை மட்டுமே பாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளதாக தெரிவித்தார். முன்பெல்லாம் பாடல்கள் அதிக நேரம் இருந்த நிலையில் தற்போது பாடலின் நேரம் குறைந்து விட்டது குறித்தான கேள்விக்கு தற்பொழுது எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் போல் பாடல்கள் ஆகிவிட்டதாகவும் முன்பெல்லாம் இலையில் பலகாரங்கள் அனைத்தும் வைத்து இருப்போம் தற்பொழுது பர்கர் போல் மாறிவிட்டது என பதிலளித்தார்.

வல்கரான பாடல்கள் தற்பொழுது அதிகரித்து வருவதை குறித்து கேள்வி எழுப்பியதற்கு இதுபோன்ற பாடல்கள் அப்பொழுது இருந்தே இருப்பதாக பதில் அளித்தார்.அடுத்த இரண்டு மாதங்களில் தனது இசையில் இரண்டு படங்கள் வெளியாவதாக தெரிவித்தார்.இறுதியாக அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க “தென்றல் வந்து தீண்டும் போது” பாடலை பாடினார்.

மேலும் படிக்க