• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் முறையாக “செட்டிநாடு திருவிழா” துவக்கம் !

January 7, 2023

கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் கோயம்புத்தூர் விழா 2023-ன் ஒரு பகுதியாக, நகரத்தார் தொழில்முனைவோர் சங்கம் (NEU) சார்பில் முதல் செட்டிநாடு திருவிழாவை, செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவர் முத்தையா தொடங்கி வைத்தார்.

கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் (டி ஹால்) இந்த மாபெரும் நிகழ்வு செட்டிநாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.செட்டிநாடு மக்களுக்கு அருளும் வகையில் 9 கோவில்களின் பிரதிகள் செய்யப்பட்டு கண்காட்சி அரங்கு வாசலில் காட்சிப்படுத்தப்பட்டது.

இங்கு காட்சிப்படுத்துவதற்கான செட்டி நாட்டிலிருந்து ஏராளமான பழங்கால பொருட்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது.செட்டிநாடு கட்டிடக்கலை, உணவு, கைவினைத்திறன், நகைகள், புடவைகள், பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவற்றை சிறப்பிக்கும் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஜெயம் சாரீஸ் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட வேகான் பருத்திப் புடவைகள் கவனத்தை ஈர்த்தது.அதே உணர்வுடன் பட்டு போன்ற புடவைகள் ஆனால் விலையில் 1/10 பங்கு ஆகும்.கையால் செய்யப்பட்ட ஓலை பைகள், கைத்தறி பருத்திப் புடவைகள், மர சமையலறை பாத்திரங்கள், எடை குறைந்த செட்டிநாடு காட்டன் சேலைகள், செட்டிநாடு சிற்றுண்டிகள், வாசனைப் பொருட்கள் மற்றும் நகைகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இதற்கிடையில்,ராயல்டி பாஸ் வைத்திருப்பவர்கள் செட்டிநாடு உணவு சமைக்க,ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்க, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட,மற்றும் அனுபவமுள்ள சமையல் கலைஞர்களால் சமைத்த ஒரு வேளை (சைவம் அல்லது அசைவம்) போன்ற பல சலுகைகளை பெற முடியும்.இங்கு பொதுமக்கள் இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செட்டிநாடு திருவிழாவை கண்டுகளித்தனர்.

துவக்க விழாவில் பிரிக்கால் நிறுவனங்களின் தலைவர் வனிதா மோகன், கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன்,குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வானவராயர்,மணிவண்ணன், கன்வீனர், நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (NEU),ராமு, தலைவர், செட்டிநாடு திருவிழா 2023, முத்துராமன், உறுப்பினர், நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மற்றும் நிர்வாக இயக்குனர், லட்சுமி செராமிக்ஸ், தொழில் முனைவோர் கூட்டமைப்பு கோ கன்வீனர் விஷ்ணு, உறுப்பினர்கள் சுப்பிரமணியம், அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க