July 27, 2017 தண்டோரா குழு
சேலம் கச்சராயன்குட்டை ஏரியை பார்வையிட வந்த சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தி கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே கைது செய்தனர்.
இது குறித்து மு.கஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வில் விலக்கு கோரி மனித சங்கிலி போராட்டம் தமிழகத்தில் நடக்க உள்ளது. இந்த போராட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
சேலம் கட்சராயன்பாளையம் ஏரியை பொது மக்கள் பாராட்டும் வகையில் தி.மு.க.வினர் தூர் வாரினர். இன்று நடக்க இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆணையை தான் அதிகாரிகள் என்னிடம் வழங்கினர். சேலம் ஏரியை பார்வையிட தடை செய்து ஆணை ஏதும் அவர்கள் வழங்கவில்லை. இந்த ஆணையை வழங்காவிட்டால், தடை மீறி சேலம் சென்று ஏரியை பார்வையிடுவேன்.
திமுக போராட்டம் நடத்தும் என்ற காரணத்தினால் தான் நீட் தேர்வு குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை சந்தித்தனர்,” என்றார்.