• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மே 29ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்

May 27, 2022 தண்டோரா குழு

கடந்த 54 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 18 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், 55–வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மே 29ல் துவங்கவுள்ளது. இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் பங்கேற்க உள்ளது.இப்போட்டிகள் 2022, மே 29 – ந் தேதி முதல் ஜுன் 3 – வரை 6 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் S. பாலாஜி, பொருளாளர் S. பத்மநாபன் மற்றும் இணை செயலாளர் M.தீபாலா ஆகியோர் கூறுகையில்,

ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள முன்னணி அணிகள் தேர்வு செய்யப்பட்டுளனர்.இதில் ஆண்கள் பிரிவில் “புது டெல்லி”- இந்தியன் ரயில்வே அணி, “புது டெல்லி” – இந்திய விமானப்படை அணி, “லோனாவாலா” – இந்திய கப்பல் படை அணி, “திருவனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரியம் அணி, “பெங்களூரு”– பாங்க் ஆப் பரோடா அணி, “சென்னை” – ஸ்போர்ட்ஸ் ஹால்டல் அஃப் எக்ஸலன்ஸ் அணி, “சென்னை” – தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் TRW அணி, “திருவனந்தபுரம் – கேரளா போலீஸ் அணி மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

பெண்கள் பிரிவில் “கோல்கத்தா”– கிழக்கு இரயில்வே அணி, “ஹூபிளி” – தென்மேற்கு இரயில்வே அணி, “செகந்திராபாத்”- தென் மத்திய இரயில்வே அணி, மும்பை”மத்திய இரயில்வே அணி, “திருவனந்தபுரம்”- கேரளா மாநில மின்சார வாரியம் அணி, “திருவனந்தபுரம்”- கேரளா போலீஸ் அணி, “சென்னை”– ரைசிங் ஸ்டார் அணி, மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1,00,000.00 மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50,000.00 மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20,000.00, நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.15,000.00 – மும், மேலும் தேர்வு செய்யப்பட்ட அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50,000.00 மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும்,இரண்டாம் பரிசாக ரூ.25,000.00 மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.15,000.00, நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10,000.00-மும், மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

இப்போட்டிகள் 2022 மே 29 – ம் தேதி துவங்கும், இந்த போட்டியில் ஜுன் 1 வரை சுழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கும் தகுதி பெறும்.இதில் வெற்றி பெறும் அணிகள் ஜுன் 3 – ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார்கள். இந்த போட்டிகள் கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் தினமும் மாலை 5.00 மணிக்கு துவங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

இப்போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.வரும் 29 – ம் தேதி மாலை 6.00 மணிக்கு துவங்கும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியை கோவை மாநகராட்சி மேயர் . “கல்பனா ஆனந்த்குமார்” மற்றும் துணை மேயர். ஆர். வெற்றிசெல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார்கள். மேலும் கௌரவ விருந்தினராக ஆர்த்தோ ஓன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் “டாக்டர். டேவிட் வி. ராஜன்” கலந்து கொள்கின்றார். சி. ஆர். ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான . “ஜி. செல்வராஜ்” அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.

ஜுன் 3 – ம் தேதி மாலை 8.00 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் படிக்க