April 6, 2023 தண்டோரா குழு
கோவை மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார்(32).இவர் பலருக்கு அரசு வேலை வாங்கி வந்ததாக கவுண்டம்பாளையம் ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி(38) என்பவரிடம் கூறியுள்ளார்.இது குறித்து பூபதி தனக்கு தெரிந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பியவர்கள் தங்களுக்கு அரசு வேலை வாங்கி தரும் படி பூபதியிடம் மொத்தம் ரூ. 36 லட்சத்து 7 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.
இந்த பணத்தை பூபதி, மோகன்குமாரின் வங்கி கணக்கிலும்,அவரின் தாய் மணி மற்றும் மனைவி ஷோபா வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளார்.பணத்தை பெற்று கொண்ட மோகன்குமார் பணம் கொடுத்தவர்களுக்கு போலி உறுதிப்படுத்துதல் கடிதத்தை வழங்கியுள்ளார். இக்கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள் அரசு அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அப்போது மோகன்குமார் கொடுத்த உறுதிப்படுத்துதல் கடிதம் போலி என தெரியவந்துள்ளது.
இதையடுத்து பூபதி கோவை குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் மோகன் குமார் மற்றும் அவரின் தாய் மணி ஆகியோரை கைது செய்து நீதிமன்றகாவலுக்கு உட்படுத்தினர்.மேலும் மோகன் குமரிடன் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.மோகன் குமாரின் மனைவி ஷோபனாவிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.