July 22, 2024 தண்டோரா குழு
இந்திய யமகா மோட்டார் சைக்கிள் நிறுவனம்,கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் தனது வாடிக்கையாளர்களுக்காக கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஒரு தனித்துவமான டிராக் டே நிகழ்ச்சியை நடத்தியது.
“தி கால் ஆப் தி ப்ளூ” பிராண்ட் முன்முயற்சியின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சியில்,கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட ரசிகர்களும், 300க்கும் மேற்பட்ட யமகா உரிமையாளர்களும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யமகா உரிமையாளர்கள் தங்களின் யமகா மோட்டார் சைக்கிள்களை பந்தயப் பாதையில் ஓட்டுவதில் உள்ள சுகத்தை அனுபவிக்கும் அற்புதமான வாய்ப்பை வழங்கியது.
இதில் பங்கேற்றவர்கள் லீன் ஆங்கிள்கள், அதிவேக கோணங்கள்,துல்லியமான பிரேக்கிங் மற்றும் வாகனத்தின் இயக்கம் ஆகியவை குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்,அத்துடன் புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் யமகா ஒய்இசட்எப்-ஆர்–3 மற்றும் எம்டி – 03 மாடல் மோட்டார் சைக்கிள்களின் பிரத்யேக கண்காட்சியும் நடைபெற்றது.
மேலும் கூடுதலாக, யமகா ஆடைகள் மற்றும் சாதனங்கள், பிரத்யேக புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததோடு, மோட்டோஜிபி கேமிங் ஏரியா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இத்துடன் இடம் பெற்றிருந்தன.இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.யமகா தனது வாடிக்கையாளர்களிடையே பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை ஊட்டி, ஆழமான பந்தய பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
“தி கால் ஆப் தி ப்ளூ ட்ராக் டே ஆக்டிவிட்டி” மூலம், யமகா நிறுவனம், இந்தியா முழுவதும் பார்வையாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.