July 12, 2023 தண்டோரா குழு
உலக அரங்கில் தொழில் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கோவையை சேர்ந்த ரிச்னெஸ் கிரியேட்டர்ஸ் புதிய முயற்சியாக தொழில் முனைவோர்களை பெரும் தொழிலதிபர்களாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் கோவையில் ஜூலை 15 ஆம் தேதி அவினாசி சாலையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரிச்னெஸ் கிரியேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சவுக்கத் பேசுகையில்,
போதுமான நிதி வசதி, தொழில் ரீதியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் தொழில் முனைவோர் குறைவாகவே உள்ளனர். இதனால் இளம்தொழில் முனைவோரின் திறமை பயன்படுத்தப்படாமலே உள்ளது. இது போன்ற தொழில் முனைவோர்களை பெரும் தொழிலதிபர்களாக மாற்றும் வகையில் அவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக கோவையில் பிசினஸ் ரோர்ஸ் எனும் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும்,12 வது பதிப்பாக நடைபெற உள்ள, இதில் தொழில் துவங்க திட்டமிடுதல்,அதனை திறனாக மார்க்கெட்டிங் செய்யும் முறைகள், மனித வளம், நிதி, என தொழில் முனைவோர்கள் எதிர் கொள்ளும் சவால்களை எவ்வாறு எதிர் கொள்வது குறித்து கருத்தரங்கில் கூற உள்ளதாக தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் பிரபல தொழிலதிபர் விஜய் கபூர், ,தன்னம்பிக்கை பேச்சாளர்கள் நீயா நானா கோபிநாத்,பரமன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும்,ஜூலை 15 ஆம் தேதி நடைபெற உள்ள இதற்கான முன்பதிவுகள் துவங்கி உள்ளதாகவும்,இளம் தொழில் முனைவோரை சாதனையாளர்களாக உருவாக்கும் இந்த கருத்தரங்கில் கோவை, திருப்பூர், ஈரோடு,பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளம் தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.