July 3, 2017
தண்டோரா குழு
10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38000 மதிப்பில் மின்மோட்டர் பொருத்திய தையல் இயந்திரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரனிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறநாளிகள் நலத்துறையின்சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.38000 மதிப்பில் மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.