• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரோட்டரி மாவட்ட செயலகம் திறக்கப்பட்டது

October 25, 2023 தண்டோரா குழு

சேவை நோக்கில் உலகெங்கும் செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கங்கள், ஒரு நாட்டில் ரோட்டரி அமைப்பின் மக்கள் நல பணிகளை சிறப்பாக முன்னெடுக்க அந்த நாட்டில் தங்களுக்கென பல பகுதிகளை எடுத்து அவற்றை கொண்டு ரோட்டரி மாவட்டங்களை உருவாக்கும்.

அதனை நிர்வாகிக்கும் பொறுப்பு ஆளுநராக தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201க்குள் கோயம்புத்தூர் நகரம்,பாலக்காடு மாவட்டம், திருச்சூர் மாவட்டம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி நகரம் மற்றும் இடுக்கி மாவட்டம் ஆகியவை அடங்கும். இதன் 2024-25 ஆண்டுக்கான ஆளுநராக மூத்த ரோட்டரி உறுப்பினரும் கோவையின் பிரபல வழக்கறிஞருமான சுந்தரவடிவேலு தேர்வாகி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன் புதிய மாவட்ட செயலகம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் இன்று (25.10.2023) திறக்கப்பட்டது.இதனை ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3000-ன் ஆளுநர் (தேர்வு) Rtn. ராஜா கோவிந்தசாமி மற்றும் மாவட்டத்தின் ஆளுநர் Rtn. விஜயக்குமார் ஆகியோர் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன் ஆளுநர் (தேர்வு) Rtn.AKS.Adv.N. சுந்தரவடிவேலு முன்னிலையில் திறந்து வைத்தனர்.

இந்த செயலகத்தில் இருந்து மாவட்ட ஆளுநர் மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய அதிகாரிகள் செயல்படுவார்கள். தன்னுடைய ஆளுநர் பதவி காலத்தில் என்னென்ன சமூக பணிகள் செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள் என Rtn.AKS.Adv.N. சுந்தரவடிவேலு அவர்களிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

இந்த ரோட்டரி மாவட்டத்தின் பல பகுதிகளில் டயாலிசிஸ் பிரிவுகளை அமைத்து மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ உதவிகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம்.குழந்தைகள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இலவச இதய சிகிச்சை அளிக்கும் திட்டம் உள்ளது. “அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை வழங்கியுள்ளது. எங்கள் தரப்பில், அரசு சேவைகள் சென்றடைய முடியாத இடங்களை நாங்கள் கண்டறிந்து, அங்கு சேவைகளை வழங்க முயற்சிப்போம்”.இவ்வாறு Rtn.AKS.Adv.N. சுந்தரவடிவேலு கூறினார்.

Rtn.Adv.N.சுந்தரவடிவேலு ரோட்டரி அறக்கட்டளைக்கு இதுவரை தனது சொந்த பணம் ரூ.2.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனால் பல நல்ல திட்டங்கள் ரோட்டரி மூலம் மக்களிடம் சென்றுள்ளது.இதன் காரணத்தால் அவர் ரோட்டரியின் Arch Klumph Society (AKS) உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோட்டரி அறக்கட்டளையின் மிக உயர்ந்த நன்கொடையாளர்களுக்கு, அதாவது வாழ்நாளில் 2,50,000 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேல் வழங்கியவர்களுக்கு AKS அங்கீகாரம் வழங்கப்படும்.

மேலும் படிக்க