November 11, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கோவை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாரேஸ் அகமது ஐபிஎஸ் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தாரேஸ் அகமது தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தாரேஸ் அகமது ஐபிஎஸ்,
கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர் தாலுகா வாரியாக பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை தொலைபேசி வாயிலாக 24 மணி நேரமும் தெரிந்துகொள்ள காவல் கட்டுப்பாட்டு அறை பேரிடர் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரச்சினையாக இருக்கக்கூடிய பகுதிகளை நாளை முழுவதுமாக பார்வையிட உள்ளேன் மாவட்டம் முழுவதும் பருவமழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறுகையில்,
வால்பாறை, மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் பவானி ஆற்றுப் படுகையில் பகுதி என மொத்தம் 27 இடங்கள் பதற்றம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது இந்த பகுதிகளில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் ஏழு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வைத்துள்ளோம் அவர்களுக்கு தேவையான வரையும் வழங்கி வருகிறோம். எந்த பிரச்சனை வந்தாலும் உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்காக 1835 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில்,
மாநகராட்சி பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதேபோல மாநகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் மூலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தயார் நிலையில் உள்ளது என்றார்.