• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக பாஜக-வினர் தர்ணா போராட்டம்

February 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் ஜிசிடி கல்லூரியில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பல இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி முகவர்கள் மற்றும் கட்சியினர் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

”32-வது வார்டு சங்கனூர் திமுக வேட்பாளராக பாபு என்கிற பார்த்திபன் போட்டியிட்டார்.அதிமுக வேட்பாளராக முருக பாபு, பாஜக வேட்பாளராக புவனேஷ் ஆகியோர் களம் கண்டனர். இந்த 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுநாள் வரை இந்த வார்டில் திமுகவினர் வெற்றி பெற்றது கிடையாது. திமுக அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த வார்டில் முழு பணிகளையும் அதிமுகவினரே செய்து வந்தோம்.

எங்கள் வெற்றிதான் பிரகாசமாக இருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 4 வாக்குப் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது. எங்களது கையெழுத்து போலியாக உள்ளது. வரிசை எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. எனவே திமுக-வினர் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். இதனைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வார்டில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டோர் கூறினர்.

இந்த திடீர் தர்ணா போராட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.

மேலும் படிக்க