April 15, 2017 தண்டோரா குழு
கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக கூறி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பூளைமேடு, முருகன் நகர், ஹட்கோ காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பீளமேடு ரயில்நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல மாதங்களாக தாமதமாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக கட்டுமான பொருட்கள் எடுத்த செல்ல குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்கள் ரயில்வே துறை இயக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், மாநில நெடுஞ்சாலை துறையின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே கட்ட பனி துவக்காத ரயில்வேதுறையை கண்டித்துநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தினர்.
மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல முறை மனு அளித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.