September 4, 2021 தண்டோரா குழு
கோவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் கடையை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டதுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவையில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுவதால் கோவையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 44 பகுதியில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மருந்தகம் காய்கறி கடைகள் தவிர மற்ற நகைக்கடைகள், துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட என்_எச்_ரோடு.,டவுண் ஹால்.,கிராஸ்கட் சாலை ,100 அடி சாலை., ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை குறிப்பிட்ட 44_பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதித்துள்ளார்.
அதன்படி இன்று அத்தியாவசியத் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.