• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 162 வது ஆண்டு விழா

August 27, 2024 தண்டோரா குழு

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 162 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல் பட்டு வருகின்றது. கோவையின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியின் நிறுவனரான ராபர்ட் ஸ்டேன்ஸ் கோவை நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்நிலையில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ஸ்டேன்ஸ் பள்ளியின் 162 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் தாளாளர் ஃபாவ்லர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முதல்வர் செலினா வினோதினி விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினரும் ஸ்டேன்ஸ் பள்ளியின் முன்னால் மாணவருமான கணபதி ராஜ்குமார்,கௌரவ அழைப்பாளராக மூத்த வழக்கறிஞரும், ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநருமான சுந்தர வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளியின் முன்னால் மாணவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி ராஜ்குமாருக்கு பள்ளியின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர்,

இந்த பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர் என்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக கூறினார். தாம் இந்த நிலைக்கு வர காரணம் தாம் பயின்ற இந்த பள்ளிதான் என்பதை உறுதியாக கூறுவதாக அவர்,பள்ளியில் பயின்ற போது தம்முடைய அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், அவர்களின் மதிப்புகள், பொறுப்புகள், தலைமைத்துவ குணங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் இங்கு இருப்பதாக தெரிவித்தார்.

தாம் இப்போது இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும் இந்தியாவின் முன்னனி தலைவர்களிடம் பேசுவதற்கும் இந்த பள்ளியில் பயின்ற அனுபவம் தமக்கு இன்றளவும் கை கொடுப்பதாக நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஸ்டேன்ஸ் பள்ளியில் பயின்று சிறந்த மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டு,கலை நிகழ்ச்சி உள்ளிட்ட போட்டிகளில் சிறந்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள்,முன்னால் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க