March 2, 2025
தண்டோரா குழு
தமிழ்நாடு முதலமைச்சர் 72வது பிறந்த நாளை முன்னிட்டு 1000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் வழங்கினார்.
திராவிட மாடல் நாயகன்,சமூகநீதி பாதுகாவலர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழிகாட்டுதல் படி,மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் ஆலோசனை படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் 1000 ஏழை,எளிய மக்களுக்கு தல 5 படி அரசி தனது இல்லத்தில் வழங்கினார்.
மேலும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.மேலும் இதனை தொடர்ந்த ஜாதி மத பேதமின்றி சமூகநீதி அடிப்படையில் 72 ஆலயங்களில் அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறியதாவது’-
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பேரறிஞர் அண்ணா வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72- வது பிறந்த நாளில் மாண்புமிகு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழிகாட்டுதல் படியும்,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனை படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவராகிய எனது தலைமையில் 1000 ஏழை, எளிய மக்களுக்கு தல 5 கிலோ அரிசி வழங்கியுள்ளோம்.
இனம் காக்க,மொழி காக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராட காத்துக்கொண்டு உள்ளோம். மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்து மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த வரும் பாசிச ஒன்றிய மைனாரிட்டி அரசின் கனவு தமிழத்தில் பழிக்காத காரணத்தால் இன்று பாராளுமன்ற தொகுதி மறு வரையறை என்ற பெயரில் தென்னிந்தியவையும், குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து வஞ்சிக்க நினைக்கிறது.ஒன்றிய பாசிச வெறி பிடித்த மைனாரிட்டி பாஜக அரசின் கனவு பலிக்காது. என்பதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளில் உறுதி ஏற்றுள்ளோம்.