• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 120 அடி கிணற்றில் பாய்ந்து கார் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

September 9, 2022 தண்டோரா குழு

கோவை – சிறுவாணி சாலையில் உள்ள கிளப்பில் நேற்று இரவு ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு காலை வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன்(18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில்(Suzuki Iszusu) நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்தது. முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்து விட உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ்(18),விவேக்பாபு(18),நந்தனன்(18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்றவர்கள்.

இந்த விபத்தில் வடவள்ளி சேர்ந்த பகுதியைச் சேர்ந்த ஆதேஷ், ரவி மற்றும் நந்தனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த படுகாயம் அடைந்த ரோஷன் என்பவரை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், 3 பேரின் உடலை கிணற்றிலிருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். மேலும் அந்த வாகனத்தை கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க