February 27, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில்,1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது.ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போடப்படுகிறது. அதன்படி இன்று கோவை மாவட்டத்தில்,1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.தொடர்ந்து இன்று கோவை உக்கடம்,சிங்காநல்லூர்,காந்திபுரம் உள்ளிட்ட பேருந்துகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,190 மையங்களிலும், நகர்ப்புறங்களில் 379 மையங்களிலும் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது மட்டுமின்றி, 22 நடமாடும் வாகனம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் சொட்டு மருந்து முகாம் காலை 7:00 முதல், மாலை 5:00 மணி வரை நடக்கிறது கோவையில், 3 லட்சத்து 37 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கிடப்பட்டுள்ளது. அடையாளம் காண, குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது.