• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 19,000 பேர் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சி திட்டங்கள் – லார்சன் அண்டு டுப்ரோ நிறுவனம் ஒப்படைப்பு

January 8, 2022 தண்டோரா குழு

லார்சன் அண்டு டுப்ரோ நிறுவனம் அதன் சமூக பொறுப்பு முன்னெடுப்பின் கீழ் உருவாக்கிய இரண்டு ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சி திட்டங்களை தமிழக வேளாண்துறை , துணை இயக்குநர் ஷபி அகமது வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சூலூரில் உள்ள கலங்கல் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த திட்டங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு மாவட்ட கிராம மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் தா . முருகன் அவர்களால் தொடங்கப்பட்டது.எல் அண்டு டி நிறுவனத்தின் அதன் சமூக பொறுப்பு முன்னெடுப்பின் கீழ் இந்தியாவின் சமூக உள் கட்டமைப்பை கட்டியெழுப்பும் விதமாக, அதன் கொள்கையை உணர்ந்து, தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், கிராமப்புறங்களில் வேளாண் வடிகால் மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது.

எல் அண்டு டி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சி திட்டம் ,மதுக்கரையில் 2 ஆயிரம் ஹெக்டேர், சூலூரில் 1,585 ஹெக்டேரையும் உள்ளடக்கியுள்ளது.இந்த திட்டம் உள்ளுர் மக்களின் அதிலும் குறிப்பாக பெண்களின் பிரதான பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. மண் மற்றும் நீராதாரங்களில் தொடங்கி , படிப்படியாக பல்வேறு கட்டங்களாக வடிகால் வசதிகளை மேம்படுத்துதல், பள்ளி கட்டிடங்களை மராமத்து செய்தல் என இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

எல் அண்டு டி நிறுவனத்தின் கார்ப்பரேட் மையத்தின் தலைவர் டாக்டர் ஹசீத் ஜோசிபுரா கூறுகையில் ,

“ ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டத்தில் எல் அண்டு டி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனித்துவமானவை. உள்ளூர் மக்களுக்கு நீண்ட கால நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.2015 இல் எல் அண்டு டி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டப் பணிகள் கிராமப்புற மக்களால் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுவதே எல் அண்டு 19 நிறுவனத்தின் சமூக பொறுப்பு பொது மக்களுக்கு மிகவும் பலனளிக்கிறது என்ற சான்றுகளில் ஒன்றாகும். ” எல் அண்டு டி நிறுவனத்தின் செயல்பாடுகளின் தாக்கம் இங்கு வெளிப்படையாக தெரிகிறது.

ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் 940 அடியிலிருந்து 550 அடிக்கும் திறந்த வெளிகிணறுகளில் 55 அடிக்கும் உயர்ந்துள்ளது. மண்ணில் மேற்கொண்ட செயல்பாடுகள் மூலமாக 732 ஹெக்டேர் அளவுக்கு கூடுதல் விளைநிலங்கள் பயனளிக்கின்றன.மேலும் 587 ஹெக்டேர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.இந்த செயல்பாடுகள் மூலம் தோட்டக்கலை மேம்பாடு 80 ஹெக்டேர் அளவுக்கும் பயிர்களின் விளைச்சல் 25 சதவீதமும் உயர்ந்துள்ளது.

30 ஆயிரம் டன் பசுந்தீவனம் மற்றும் 15 ஆயிரம் உலர் தீவனம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதன் விளைவுகள் கால்நடை வளர்ப்பிலும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்களுக்கு 500 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதுடன் , 4 அரசு பள்ளிகளுக்கு சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

என்எஎப் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டாக்டர் எம்.ஆர்.ராமசுப்ரமணியன் இந்த திட்டத்தில் தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கூறுகையில் , “

தொடக்கத்திலிருந்தே திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் உள்ளுர் மக்களுடன் இணைந்து செயல்பாடுகளை மேற்கொண்டோம்.இந்த திட்டங்களின் உரிமை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் உள்ளுார் பஞ்சாயத்து மற்றும் சமூக உறுப்பினர்கள் குறிப்பாக மிகவும் பலமான வகையில் பெண்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர்”என்றார்.

வறுமை ஒழிப்பு,சமூக பிரச்னைகளில் விழிப்புணர்வு,சமூகத்தை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாடு ,முடிவு எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்களை பங்கேற்க செய்தல்,ஒட்டுமொத்த அளவில் அதிகாரமளிப்பதற்கும் தேவைப்படுபவர்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை உருவாக்கவும் இந்த திட்டம் வழிவகுக்கும்.தற்போது எல் அண்டு டி நிறுவனத்தின் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து ( 18 ) பள்ளிகளிலும் தரமான கல்வியை வழங்குவதற்கான அணுகுமுறையை மேம்படுத்தும் செயல்பாடுகளை அறிமுகம் செய்யும் ஈடுபட்டுள்ளது.எல் அண்டு 19 நிறுவனம் செயல்படும் பகுதிகளில் பொதுமக்களை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.

எல் அண்டு டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு கொள்கை என்பது,” இந்தியாவின் சமூக உள்கட்டுமானத்தை உருவாக்குதல் ” என்பதாகும்.மேலும்,கல்வி,சுகாதாரம்,குடிநீர் மற்றும் வடிகால்,திறன்மேம்பாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் எல் அண்டு டி நிறுவனம் பல்வேறு செயல்பாடுகளை அதன் சமூக பொறுப்பு முன்னெடுப்பின் வாயிலாகவும் , தன்னார்வ செயல்பாடுகள் மூலமாகவும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க