September 19, 2022
தண்டோரா குழு
கோவையை அடுத்த குருடம்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு ஒன்று கோவை சரவணம்பட்டி கீரநத்தம் பகுதியில் புகுந்தது. சரவணம்பட்டி, காளப்பட்டி பகுதியில் உள்ள புதர் மறைவுகளில் காட்டுமாட்டை தேடும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,கோவை நகருக்குள் இரு தினங்களாக சுற்றிதிரிந்த காட்டு மாடு இன்று புறநகர் பகுதியான மயிலம்பட்டி பகுதியில் சுற்றியபோது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.அதை லாரியில் ஏற்றி ஆனைகட்டி வனப்பகுதிக்குள் விட கோவை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.