June 17, 2022 தண்டோரா குழு
கோவை மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக புகார் வந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் 9 இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.கோவை பெரியகடை வீதி, காட்டூர், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், பீளமேடு உள்பட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போய்யுள்ளது
இந்த நிலையில் பீளமேடு வி.கே. ரோடு பகுதிைய சேர்ந்த ஸ்ரீகாந்த் (45) என்பவர் தனது மொபட் திருட்டு போது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.சமூக வலைதளங்களில்
அதில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை லாவகரமாக திருடி மெதுவாக சாலையில் தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மாநகரில் நேற்று முன்தினம் 12 இருசக்கர வாகனங்கள் திருட்டு போன நிலையில் நேற்று மீண்டும் 9 வாகனங்கள் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் 2 நாட்களில் 21 புகார்கள் பதிவாகி உள்ளன.