November 10, 2022
தண்டோரா குழு
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில் சதி திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர்,ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.