• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 2023 புத்தாண்டு வெகு விமர்சியாக நடைபெற்றது

January 1, 2023 தண்டோரா குழு

2023 “புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையில் உள்ள சுமாா் 120 தனியாா் தங்கும் விடுதிகளிலும் – 10 நட்சத்திர ஓட்டல்களிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலீசார சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் கோவை மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும், பாதுகாப்புப் பணிகளில் 1,500 போலீசாா் ஈடுபடுவாா்கள், மது போதையில் வாகனங்களை இயக்குவோா், வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விதித்துள்ளாா்.

அதேபோன்று தனியாா் தங்கும் விடுதிகளைப் பொறுத்தவரையில் இரவு 1 மணி வரையிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அவா்கள் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் இந்த ஆண்டு போலீசாருடன் இணைந்து சுகாதாரத் துறையினரும் புத்தாண்டு இரவுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதற்காக கோவை மாநகரில் உள்ள 15 போலீஸ் நிலையங்களிலும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை சிறப்பு மருத்துவ மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறப்பு மருத்துவ மையங்கள் கோவையில் ராமநாதபுரம் சந்திப்பு, டி.பி. சாலை சந்திப்பு, புரூக்பீல்டு, வடகோவை, அவினாசி சாலை, கொடிசியா, கோவைப்புதூா் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு மருத்துவ மையங்கள் செயல்படும். விபத்துகளில் சிக்குவோா், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவோா் உள்ளிட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் இந்த சிறப்பு மருத்துவ மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகோவை, லட்சுமி மில் சந்திப்பு, பீளமேடு உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் முகாம் அமைத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து அறிவுரை வழங்க உள்ளனர்.கோவை மாநகராட்சி சார்பில் வாலாங்குளம் பகுதியில் 12 மணி அளவில் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொண்டனர். 2023″ஆண்டு ஆங்கில புத்தாண்டை ஒட்டி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது.

இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்வானது நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றது. இதேபோல கோவை நகரில் உள்ள பெரும்பாலான தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க