• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 23ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

October 21, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் வரும் 23ம் தேதி 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 5 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் தாக்கம் தற்சமயம் குறைந்து வருகிறது. இந்நிலையில் வரும் 23ம் தேதி சனிக்கிழமை 6-வது தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இம்முகாம் மூலம் இரண்டு இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணைக்காக காத்திருப்போரும் தற்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இந்த முகாம்களில் தடுப்பூசி பெற்று பயனடையலாம். இதன்மூலம் கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவின் தாக்கம் முழுவதும் குறைய வாய்ப்பாக அமையும்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் 1104, மாநகராட்சி பகுதிகளில் 325 என மொத்தம் 1429 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமிற்காக தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க