November 27, 2021 தண்டோரா குழு
300 தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை கோவை தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் வழங்கினார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம் மற்றும் தொழிலாளர் நலத் துறையும் இணைந்து குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நிரந்தரத் தொழிலாளர் அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முகாம் இடையர்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு டாக்ட் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார்.கோவை தொழிலாளர் நலத் துறை துணை கமிஷனர் செல்லப்பா அடையாள அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.இந்த முகாமில், இஎஸ்ஐ பதிவு இல்லாத, குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதற்கட்டமாக 300 பேருக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து உடனுக்குடன் அளிக்கப்பட்டது.
நிகழ்வில் தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள், டாக்ட் சங்க நிர்வாகிகள் பிரதாப் சேகர், லீலாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.