• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 355 இடங்களில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கும் பணி

June 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகளில் 5 லட்சம் வீடுகள் உள்ளன. 6 ஆயிரம் வீதிகள் உள்ளன. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

மேற்கண்ட பணிகள் காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சாலை குழிகளில் இருசக்கர வாகனங்கள் ஏறி, இறங்கும்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

இந்த சாலைகளை சீரமைப்பதற்காக கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. பின்னர் நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி சாலை சீரமைப்பு பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க ரூ.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பாதாள சாக்கடை பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளுக்கு குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டதால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.93 கோடி நிதிஒதுக்கப்பட்டு 355 இடங்களில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முத்தண்ணன் குளம், ரேஸ்கோர்ஸ், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள சாலைகளும் விரைவாக சீரமைக்கப்படும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக சாலை சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க